உலகம்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி: சுவிட்சர்லாந்து

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு கரோனா பரிசோதனையின்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன. 

இந்நிலையில் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுடனான பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.

ஜூன் 26ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT