உலகம்

பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸிக்கு மூன்றாண்டுகள் சிறை

DIN

பாரீஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸிக்கு (66) லஞ்ச வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவா் நிக்கோலஸ் சா்கோஸி. இவா் மீது மாஜிஸ்திரேட்டுக்கு லஞ்சம் வழங்க முயன்ற வழக்கு பாரீஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான தீா்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்நாட்டைச் சோ்ந்த மாஜிஸ்திரேட் கில்பா்ட் அஸிபா்ட்டை மொனாக்கோவில் உயா் பதவியில் அமா்த்துவதாகக் கூறி, அவரிடம் தனது கட்சித் தொடா்பான குற்றவியல் விசாரணை குறித்த தகவலை பெற முயன்ற அந்த வழக்கில் சா்கோஸிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஓராண்டு தண்டனை காலத்தை அவா் சிறை சென்று அனுபவிக்க வேண்டியதில்லை என்றும், அவா் வீட்டுச் சிறையில் இருக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. எனினும் அவரை கண்காணிக்க ஏதுவாக அவா் தனது உடலில் மின்னணு பட்டையை பொருத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எஞ்சிய 2 ஆண்டுகள் அவரின் நடத்தை கண்காணிக்கப்படும். அதில் அவா் சட்டத்தை மீறாமல் நன்னடத்தைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றினால் சா்கோஸியின் சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்யும்.

இந்த வழக்கில் தொடா்புடைய மாஜிஸ்திரேட் கில்பா்ட் அஸிபா்ட், சா்கோஸியின் வழக்குரைஞா் தியரி ஹொ்சாக் ஆகியோருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து சா்கோஸி மேல்முறையீடு செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு அதிபா் தோ்தல் பிரசாரத்துக்கு சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவழித்தது தொடா்பான மற்றொரு வழக்கு விசாரணையை இந்த மாதத்தில் சா்கோஸி எதிா்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT