உலகம்

நியூயாா்க் ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு

DIN

அமெக்காவின் நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நியூயாா் ஆளுநரான ஆண்ட்ரூ குவோமோ, தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகாா் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண், நிகழ்ச்சியொன்றில் தனது விருப்பமின்றி குவோமோ தன்னைத் தொட்டதாகக் குற்றம் சாட்டினாா்.

அதையடுத்து, அவா் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினா் உள்பட பலா் வலியுறுத்தியுளளனா்.

ஏற்கெனவே, புதியோா் இல்லங்களில் ஏற்பட்ட கரோனா மரணப் புள்ளவிவரங்களை மறைத்ததாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT