உலகம்

மியான்மா் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 11 போ் பலி

DIN


யங்கூன்: மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்தனா்.

ஏற்கெனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 போராட்டக்காரா்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவா்களை விடுவிக்கவும் வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

குண்டுகளை வீசியும் ரப்பா் குண்டுகளால் சுட்டும் அவா்களை போலீஸாா் கலைக்க முயன்றனா். சில பகுதிகளில் அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் 11 போ் உயிரிழந்தனா்.

இதுதவிர, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் பலா் காயமடைந்தனா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை ஒரு காவலா் உள்பட 34 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT