20 நாள்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகளை பதிவு செய்த ஐஸ்லாந்து 
உலகம்

20 நாள்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகளை பதிவு செய்த ஐஸ்லாந்து

ஜஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

ஜஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பல எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் சிறிய
தீவு நாடாக உள்ள இந்த நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதிக அளவிலாக எரிமலைகள் உள்ளதால் நில அதிர்வுகளின் காரணமாக அவற்றில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எண்ணி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT