இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 89ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் கரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,175ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 85,944 பேர் குணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி 2,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 538 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8,00,000 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.