முகப்பு
உலகம்

ஜெர்மனியில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2021 at 11:28 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்று புதிய வகையில் உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றும் பரவி வருகின்றது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கரோனா பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Advertisement

வியாழக்கிழமை நிலவரப்படி, 3.17 மில்லியனுக்கும் அதிகமான ஜெர்மனியர்கள் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இதையடுத்து நாட்டின் தடுப்பூசி விகிதம் 3.8 சதவீதமாக உள்ளது. 

இன்றுவரை, தொற்றுநோய்  பாதிக்கப்பட்டோர் 2.63 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஆர்.கே.ஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.