பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,650 பேர் பலி
பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,650 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,650 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் தற்போது 2-ம் இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கு 84,245 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,04,414ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று ஒரேநாளில் புதிய உச்சமாக 3,251 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,07,112ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18.5 மில்லியன் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 14.07 மில்லியின் பேருக்கு முதல் டோஸும், 4.51 பேருக்கு 2-ம் டோஸும் செலுத்தப்பட்டுள்ளன.