கெய்ரோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு
கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 10 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 5 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டடம் இடிந்ததற்கான காரணம் தெரிவரவில்லை.