ஐஸ்லாந்தில் தீப்பிழம்புகளை கக்கும் எரிமலையைக் காண திரளும் சுற்றுலாப் பயணிகள் 
உலகம்

ஐஸ்லாந்தில் தீப்பிழம்புகளை கக்கும் எரிமலையைக் காண திரளும் சுற்றுலாப் பயணிகள்

ஜஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறிய எரிமலையைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

DIN

ஜஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறிய எரிமலையைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பல்வேறு எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் சிறிய
தீவு நாடாக உள்ள இந்த நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பிழம்புகள் வெளியாகும். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்லாந்தில் உள்ள ஃபக்ரடால்ஸ்ஜால் எரிமலை தீப்பிழம்புகளை கக்கிவருகிறது. இதனால் எரிமலையிலிருந்து தீப்பிழம்புகள் ஆறு போல் வெளியாகி வருகின்றன. 

தீப்பிழம்புகளில் வெளியாகும் லாவாவைக் காண அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனர். மேலும் இதனை தங்களது அலைபேசிகளிலும், கேமராக்களிலும் படம் பிடிக்கும் அவர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT