உலகம்

கிழக்கு சீனாவில் கனமழை: 11 பேர் பலி, 102 பேர் காயம்

ANI

கிழக்கு சீனாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் 11 பேர் உயிரிழந்தனர். 102 பேர் காயமடைந்தனர். 

கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் அமைந்துள்ள நாந்தோங் நகரத்தில் பலத்த காற்று வீசியதால் யாங்சே டெல்டாவை வெகுவாக தாக்கியது. இதனால் அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் மக்களை வெளியேற்றி வருகின்றனர். இதுவரை 3,050 பேரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். 

மணிக்கு 162 கிலோ மீட்டர் (100 மைல்) வேகத்தில் காற்று வீசியதால், மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்துள்ளது. கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற இரண்டு மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும், ஒன்பது பேரைத் தேடி வருகின்றனர். 

நாந்தோங்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாலையில் விழுந்த மரங்கள், சேதமடைந்த வாகனங்கள் ஆகியவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT