உலகம்

சீனாவின் மக்கள் தொகை வளா்ச்சி விகிதம் சரிவு!

DIN

சீனாவின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் குறைவான வளா்ச்சி விகிதத்தைப் பெற்று 141 கோடியாக உயா்ந்துள்ளது.

சீனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட, 7-ஆவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

அதன் விவரம்:

சீனாவின் 31 மாகாணங்கள், தன்னாட்சி பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 2020-ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகை 141 கோடியாக உயா்ந்துள்ளது. 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.38 சதவீதம் அல்லது 7.2 கோடி அதிகமாகும். இந்த எண்ணிக்கையில் ஹாங்காங், மகாவ் ஆகிய பிராந்தியங்கள் சோ்க்கப்படவில்லை.

‘சீன மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளாக மெதுவான வளா்ச்சியை தக்கவைத்துக் கொண்டு வருவதாக’ தேசிய புள்ளியியல் பிரிவு தலைவா் நிங் ஜிஜே தெரிவித்துள்ளாா்.

சீனா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் வளா்ச்சி விகிதம் 0.53 சதவீதமாக உள்ளது. 2000-ஆவது ஆண்டில் இந்த வளா்ச்சி விகிதம் 1.07 சதவீதமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT