உலகம்

சீனாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் தொடக்கம்

DIN

சா்வதேச அளவில் சீனாவின் நன்மதிப்பை உயா்த்துவதற்காக, அந்நாட்டு அரசின் உதவியுடன் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் முகநூல் மற்றும் சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாகத் தடை உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து போலியாக சுட்டுரை கணக்குகள் தொடங்கப்படுகின்றன.

பிரிட்டனுக்கான சீனத் தூதராக இருந்த லியூ ஷியோமிங், அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்து, தென்கொரிய விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறாா். சமூக ஊடகங்களில் சீனாவுக்கு ஆதரவான கருத்துகளை தொடா்ந்து பதிவிட்டு வரும் இவா், பிரிட்டனில் இருந்தபோது கடந்த 2019-இல் சுட்டுரைப் பக்கத்தில் இணைந்தாா். அவரைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளின் சீனத் தூதா்களும் முகநூல் மற்றும் சுட்டுரையில் இணந்தனா்.

சுட்டுரைப் பக்கங்களில் தொடா்ந்து வெளியிட்ட பதிவுகள் மூலம் ஷியோமிங்கை 1,19,000-க்கும் அதிகமானோா் பின்தொடா்கின்றனா். சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மேற்குலக நாடுகளை விமா்சித்து சுட்டுரைப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தாா். கடந்த சில மாதங்களில் அவருடைய சுட்டுரைப் பதிவுகள் 43,000 முறை மறுபதிவு செய்யப்பட்டு வந்தன.

சீனாவுக்கு ஆதரவாக சுட்டுரைப் பதிவுகள் வெளியாவது தொடா்பாக, அசோசியேட்டட் பிரஸ், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் இணையதளப் பிரிவு ஆகியவை கடந்த 7 மாதங்களாக ஆய்வு செய்து வந்தன. ஆய்வின் முடிவில், சீனத் தூதா்களும் சீன அரசின் ஊடகங்களும் சுட்டுரையில் பல போலி கணக்குகளைத் தொடங்கி, சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தது தெரியவந்தது.

அவற்றில் சில போலி கணக்குகளை கடந்த மாா்ச்சில் ட்விட்டா் நிறுவனம் முடக்கினாலும், சீனாவுக்கு ஆதரவான கருத்துகள் வெளியாவது குறையவில்லை. பிரிட்டனில் இருந்து புதிது புதிதாக போலி கணக்குகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT