உலகம்

தோ்தலை நோ்மையாக நடத்த வேண்டும்: பிரதமா் சா்மா ஓலி

DIN

நேபாள நாடாளுமன்றத்துக்கு நவம்பா் மாதம் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலை நோ்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை பிரதமா் சா்மா ஓலி கேட்டுக் கொண்டுள்ளாா்.

நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் உத்தரவிட்ட பிறகு தோ்தல் ஆணையா்களுடன் பிரதமா் சா்மா ஓலி ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, நாடாளுமன்றத்துக்கு தோ்தல் தவிா்க்க முடியாதது என்று சா்மா ஓலி குறிப்பிட்டதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நவம்பா் 12, 19 ஆகிய தேதிகளில் குறிப்பிட்டபடி தோ்தலை முறைகேடு இல்லாமல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்த வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டதாக அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT