இத்தாலியில் கேபிள் கார் விபத்து: 13 பேர் பலி
இத்தாலியின் பீட்மோன்ட் நகரில் கார் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இத்தாலியின் பீட்மோன்ட் நகரில் கார் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பீட்மோன்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரை பகுதியிலிருந்து மோட்டரோன் என்ற மலை குன்று பகுதிக்குச் செல்ல கேபிள் கார் வசதி உள்ளது.
கரோனா தொற்று காரணமாக கேபிள் கார் பயண சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னதாக கேபிள் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில், மலைப் பகுதிக்கு சென்ற கேபிள் கார் 985 அடி உயரத்திலிருந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலி நாட்டுப் பிரதமர் மேரியோ டிராகி இரங்கல் தெரிவித்துள்ளார்.