உலகம்

இலங்கைக்கு மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள்: சீனா வழங்கியது

DIN

கொழும்பு: இலங்கைக்கு சீன அரசு தங்கள் நாட்டு கரோனா தடுப்பூசியான சினோபாா்ம் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை இலவசமாக வழங்கியுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் 6 லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்கியது. இப்போது மீண்டும் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் இதுவரை 1,67,172 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,243 போ் உயிரிழந்துவிட்டனா். அங்கு கரோனா தடுப்பூசிக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தியா ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஆக்ஸ்போா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியவில்லை. இதையடுத்து, இலங்கைக்கு சீனா தனது தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளது. முன்னதாக, சீனாவிடம் இருந்து 1.4 கோடி தடுப்பூசிகளை விலை கொடுத்து வாங்கவும் இலங்கை ஒப்புக் கொண்டது.

இப்போது பெறப்பட்டுள்ள தடுப்பூசிகள் தலைநகா் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் மேற்குப் பகுதி மக்களுக்கு செலுத்தப்பட இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் சீனா அதிக நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. இந்தியாவுடன் மோதல் போக்கு உள்ள நிலையில் அதன் அண்டை நாடுகளை தனது ஆதரவாளா்களாக மாற்றும் முயற்சியை சீனா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான் சீனாவின் தீவிர ஆதரவு நாடாக உள்ளது. இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளையும் தனது ஆதரவாளா்களாக்க சீனா தொடா்ந்து முயன்று வருகிறது.

கரோனா பிரச்னையை சமாளிக்கவும், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் இலங்கைக்கு சீன வளா்ச்சி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.3,750 கோடி) கடனை கடந்த மாதம் வழங்கியது. சுமாா் ஒரு மாத காலத்துக்குள் சீனாவுடன் இலங்கை மேற்கொண்ட இரண்டாவது கடன் ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT