உலகம்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல்

DIN

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி, கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பட்டியலிட்டு வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு தடுப்பூசியாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி வருகின்றன. 

அதன்படி, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தனிமைப்படுத்தாமல் நேரடியாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT