தென் ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு!
இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரிய விருதான ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாமன் கல்கட் எனும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரிய விருதான ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாமன் கல்கட் எனும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டு தோறும் புக்கர் பரிசிற்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய ‘தி பிராமிஸ்’ என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் ‘தி பிராமிஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுத் தொகையான ரூ.50.21 லட்சம் டாமன் கல்கட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
Advertisement
Advertisement
முன்னதாக டாமன் 2 முறை புக்கர் பரிசின் இறுதிச் சுற்று வரை தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.