உலகம்

ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கிடையே எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம்: பிரிட்டன் முப்படை தளபதி எச்சரிக்கை

DIN

பனிப்போர் தொடங்கிய காலத்திலிருந்து, பாரம்பரியமான தூதரக உறவு இல்லாதிருக்கும் நிலையில், ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கிடையே எந்நேரத்திலும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என பிரிட்டன் முப்படை தளபதி நிக் கார்டர் தெரிவித்துள்ளார். 

டைம்ஸ் ரேடியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த பல்முனை உலகின் புதிய அத்தியாயத்தில் பதற்றத்தின் வழியே அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில், பல்வேறு இலக்குகளுக்காகவும் திட்டங்களுக்காகவும் அரசுகள் போட்டி போட்டு கொள்கின்றன. 

எங்களுடைய அரசியலில் சிலரின் போர்க்குணமிக்க தன்மை அதிகரித்து, தவறான கணக்கீடுகளுக்கு இட்டுச் சென்று முடிவடைவதை மக்கள் அனுமதிக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புலம்பெயர்ந்தோர், அதிகரித்து வரும் எரிவாயு விலைகள், இணைய தாக்குதல்கள் போன்ற எந்தவொரு கருவியையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த சர்வாதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். 

போரின் தன்மை மாறிவிட்டது. பனிப்போரின் இரு துருவ அரசியலையும் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒருமுனை அரசியலையும் தொடர்ந்து, தூதர்கள் இப்போது மிகவும் சிக்கலான பல துருவ அரசியலை எதிர்கொண்டு வருகின்றனர். பனிப்போர் சமயத்தில் இருந்த பாரம்பரியமான தூதரக முறை தற்போது இல்லை. 

இம்மாதிரியான தூதரக வழிமுறைகள் இல்லாத நிலையில், இது தவறான கணக்கீடுகளுக்கு இட்டு செல்லும் ஆபத்து உள்ளது. எனவே நாம் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான சவால் இதுதான் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

போலாந்து உடனான எல்லையில் ஆயிரக்கணக்கான அகதிகளை அனுப்பி நெருக்கடியை ஏற்படுத்த பெலராஸ் முயற்சிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் பதற்றம் நிலவிவருகிறது. இந்த பிரச்னையில், ரஷ்ய, நேட்டோ படைகள் மோதி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் சனிக்கிழமை பேசுகையில், "கருங்கடலில் திட்டமிடாமல் நடத்தப்படும் நேட்டோ படையின் பயிற்சிகள் மாஸ்கோவிற்கு ஒரு கடுமையான சவாலாக அமைந்துள்ளன. மேலும், ரஷ்யாவிற்கும் அதன் நெருங்கிய கூட்டு நாடான பெலாரஸின் எல்லையில் ஏற்பட்ட நெருக்கடிக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT