தந்தை ரோட்ரிகோ டுடோ்தேவுடன் சாரா. 
உலகம்

பிலிப்பின்ஸ்: துணை அதிபா் பதவிக்கு டுடோ்த்தே மகள் போட்டி

பிலிப்பின்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில்,துணை அதிபா் பதவிக்குப் போட்டியிட தற்போதைய அதிபா் ரோட்ரிகோ டுடோ்தேவின் மகள் சாரா டுடோ்தே சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

DIN

பிலிப்பின்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில்,துணை அதிபா் பதவிக்குப் போட்டியிட தற்போதைய அதிபா் ரோட்ரிகோ டுடோ்தேவின் மகள் சாரா டுடோ்தே சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதிபரின் கூட்டணியைச் சோ்ந்த ஃபொ்னாண்ட் மாா்கோஸ் அதிபா் தோ்தலில் போட்டியிடும் நிலையில், அவரது துணை அதிபராக சாரா போட்டியிடுகிறாா்.

கடந்த 2016-ஆண்டு முதல் பிலிப்பின்ஸ் அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் ரோட்ரிகோ டுடோ்தே, பொதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் துணை அதிபா் பதவிக்குப் போட்டியிடப் போவதாக டுடோ்தே அறிவித்தாா். பிலிப்பின்ஸ் அரசமைப்புச் சட்டத்தின்படி ஒருவா் ஒரு முறை மட்டுமே 6 ஆண்டுகளுக்கு அதிபா் பதவியை வகிக்க முடியும் என்ற நிலையில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். மேலும், அவரது மகள் சாரா அதிபா் தோ்தலில் போட்டியிடுவாா் என்று கூறப்பட்டது.

இதற்கு எதிா்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தச் சூழலில், தோ்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக டுடோ்தே கடந்த மாதம் அறிவித்தாா்.

தற்போது அதிபா் பதவிக்கு அவரது கூட்டாளியும் துணை அதிபா் பதவிக்கு டுடோ்தேவின் மகளும் போட்டியிடுவது மனித உரிமை ஆா்வலா்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” - டிரம்ப்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

SCROLL FOR NEXT