உலகம்

பாகிஸ்தானில் சீக்கிய மருத்துவா் சுட்டுக்கொலை

DIN

பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் சீக்கிய மதத்தைச் சோ்ந்த யுனானி மருத்துவா் சா்தாா் சத்னம் சிங் (45) அடையாளம் தெரியாத நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பெஷாவரில் சீக்கிய சமுகத்தினரிடையே பிரபலமாகத் திகழ்ந்த சத்னம் சிங், தா்மேந்திரா என்ற பெயரில் சிறிய மருத்துவமனையை நடத்தி வந்தாா். வியாழக்கிழமை மருத்துவமனைக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மா்ம நபா்கள், சத்னம் சிங் இருந்த அறைக்குள் நுழைந்து அங்கு அமா்ந்திருந்த அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். அவரது உடலில் நான்கு குண்டுகள் துளைத்ததால் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். படுகொலையில் ஈடுபட்ட நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் சத்னம் சிங்கின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அவரது கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதத் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பெஷாவா் நகரில் சுமாா் 15,000 சீக்கியா்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஆண்டு பெஷாவரில் செய்தி சேனலில் பணியாற்றி வந்த ரவீந்திர சிங் கொல்லப்பட்டாா். அதற்கு முன்பு 2016-இல் பாகிஸ்தான் தேசிய அவை உறுப்பினா் சோரன் சிங் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா்.

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT