முகப்பு
உலகம்

ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம்

ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த ஓராண்டாக ஜப்பானின் பிரதமராக இருந்து வந்த யோஷிஹிடே சுகா, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகினாா். இதையடுத்து, நடைபெற்ற போட்டியில் புதிய கட்சித் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் ஃபுமியோ கிஷிடா தேர்வானார். கடந்த 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பிரதமராகபொறுப்பேற்றார் . 

இதையடுத்து, ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

'ஜப்பானின் புதிய பிரதமரான ஹெச்.இ. கிஷிடா ஃபுமியோவுக்கு வாழ்த்துகள்.  இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையேயான அமைதியையும் செழிப்பையும் மேம்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →