உலகம்

பிரான்ஸ் கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: போப் பிரான்சிஸ் வருத்தம்

DIN

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவா்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருவதாகவும், அவை நீண்ட காலமாக மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார்களை விரிவாக விசாரிப்பதற்கான குழுவை பிரான்ஸ் கத்தோலிக்க தலைமையகம் அமைத்தது. அந்தக் குழு, கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை கடந்த 2018-ஆம் ஆண்டு சேகரிக்கத் தொடங்கியது.

அந்தக் குழு தனது 2,500 பக்க விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் சுமாா் 3.30 லட்சம் சிறுவா்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், “துரதிருஷ்டவசமாக, பெரும் எண்ணிக்கையில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் அனுபவித்த காயத்திற்கு எனது வருத்தத்தையும் வலியையும் தெரிவிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

“தேவாலயத்தின் இயலாமையால் நீண்ட காலமாக அவர்களை இந்தக் கொடுமையை அனுபவிக்கச் செய்தது அவமானகரமானது, எங்கள் அவமானம்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ் கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT