உலகம்

ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் பலி

DIN

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுபடுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று (அக்-14) வியாழக்கிழமை மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஏமனின் மரீப் மாகாணத்தில் சமீப காலமாக ஹகுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறல் அதிகரித்து வந்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT