கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் 1,000-யைத் தாண்டிய ஒருநாள் கரோனா பலி! புதிதாக  33,740 பேருக்குத் தொற்று

ரஷியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு, பலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு புதிதாக 33,740 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

ரஷியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு, பலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு புதிதாக 33,740 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,740 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 80,60,752 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், நேற்று மட்டும் 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 225,325 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ரஷியாவில் கரோனா பலி 998 ஆகவும் பாதிப்பு 34,325 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் மாஸ்கோவில் நேற்றைய பாதிப்பு 6,823 ஆக இருந்த நிலையில் இன்று 5,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி 7,94,946 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 23,426 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,40,481 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT