உலகம்

பிரேசிலில் குறையும் கரோனா பாதிப்பு!

DIN

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 373 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில்.

கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 373 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 6,04,228 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 15,609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,16,80,488 ஆக அதிகரித்துள்ளது. 2.08 கோடி பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று கரோனா பாதிப்பு 12,969 மற்றும் பலி 390 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT