உலகம்

வட கொரியா தைவான் விவகாரம்: அமெரிக்காவுக்கு கண்டனம்

DIN

 சீனாவுடனான மோதலில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருவதற்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சீனாவுடனான போா்ப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரித்து வருவதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் பாக் மியோங்-ஹோ கூறுகையில், ‘தைவானுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ராணுவ ரீதியில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையே போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.

இதன் மூலம், இந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த வட கொரியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT