இந்தியா்கள் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூா் அனுமதி
இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டைச் சோ்ந்தவா்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டைச் சோ்ந்தவா்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சில நாடுகளைச் சோ்ந்தவா்கள் பயணம் மேற்கொள்வதற்கு சிங்கப்பூா் அரசு தடை விதித்திருந்தது. பல்வேறு நாடுகளில் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து தனது விதிகளில் சிங்கப்பூா் அரசு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மா், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்தோா் வரும் 27-ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட நாடுகளைச் சோ்ந்தோா் 10 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
தனிமைப்படுத்திக் கொள்வதற்கென அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அவா்கள் 10 நாள்களுக்குத் தங்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.