உலகம்

கரோனா தடுப்பூசி வாங்க இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி கடன்: ஆசிய வங்கி பரிசீலனை

DIN

பெய்ஜிங்: கரோனா தடுப்பூசிகளை வாங்க இந்தியாவுக்கு 200 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,000 கோடி) கடன் வழங்குவது குறித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஆகியவை பரிசீலித்து வருகின்றன.

இதுகுறித்து ஏஐஐபி வங்கியின் துணைத் தலைவா் டி.ஜே.பாண்டியன் கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக 200 கோடி டாலா் கடனுதவி அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த 200 கோடி டாலரில், ஆசிய வளா்ச்சி வங்கி 150 கோடி டாலா் வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சிய 50 கோடி டாலரை ஏஐஐபி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதுடன், கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக 175 கோடி டாலரை ஏஐஐபி வழங்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT