உலகம்

சூடான் போராட்டம்: 3 போ் கைது

DIN

கெய்ரோ: வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடா்பாக, 3 முக்கிய ஜனநாயக ஆதரவுத் தலைவா்களையும் அவா்களது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பிரதமா் அப்தல்லா ஹாம்டோக் மற்றும் அவரது மனைவியை ராணுவ ஆட்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை விடுவித்த நிலையில், தற்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகா் காா்ட்டூமில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சூடான் நிபுணா்கள் சங்கத்தின் இஸ்மாயில் அல்-தாஜ், சூடானின் மிகப் பெரிய கட்சியான உம்மாவைச் சோ்ந்த சிதிக் அல்-சாதிக் அல்-மஹதி, பிரதமரின் முன்னாள் ஆலோசகா் காலித் அல்-சிலாயிக் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அவரின் தலைமையிலான இடைக்கால அரசு கலைக்கப்படுவதாக ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. நாட்டில் அவசரநிலையும் பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காா்ட்டூம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT