உலகம்

'ஜூடோ'வின் தந்தை கனோ ஜிகோரோவின் பிறந்தநாள்: கௌரவித்த கூகுள்!

DIN

தற்காப்புக் கலைகளின் ஒன்றான ஜூடோவின் தந்தை கனோ ஜிகோரோ பிறந்தநாளன்று சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

1860 ஆம் ஆண்டு ஜப்பானில் மிக்கேஜ் பகுதியில் பிறந்த இவர், 11 ஆவது வயதில் தந்தையுடன் டோக்கியோவிற்கு இடம்பெயர்ந்தார். சிறுவயது முதலே துன்பத்தை அனுபவித்ததால் ஜூஜூட்சு என்ற தற்காப்புக்கலையை கற்றுக்கொண்டார். 

பின்னர் மல்யுத்தத்தின் ஒரு வகையாக இதனைக் கொண்டுவர நினைத்தபோது ஒப்புதலுக்காக அதில் உள்ள ஆபத்தான நுட்பங்களை விலக்கி 'ஜூடோ' என்ற பெயரில் கொண்டுவந்தார். இதுவே இன்று உலக அளவில் தற்போது பிரபலமான ஒரு கலையாக உள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இடம்பெற்ற (1909) ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கனோ ஜிகோரோ பெற்றுள்ளார். 1960ல் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ சேர்க்கப்பட்டது. 

கனோ ஜிகோரோவின் 161 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு கௌரவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT