உலகம்

‘சூடானுக்கு விரைவில் புதிய பிரதமர்’: ராணுவத் தளபதி அறிவிப்பு

DIN

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என ராணுவத் தளபதி அப்தெல் பஃடா அல் புர்கான் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் அப்தல்லா ஹோம்டோகு பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சூடான் ராணுவத் தளபதி, சூடானில் இரண்டொரு நாளில் நாட்டிற்கு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும், கலைக்கப்பட்ட இறையாண்மை குழுவிற்கு பதிலாக புதிய இறையாண்மை குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீர் ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அவரின் தலைமையிலான இடைக்கால அரசை கடந்த திங்கள்கிழமை கலைத்த ராணுவம், நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT