உலகம்

காபூல் விரைந்தாா் பாகிஸ்தான் உளவுத் துறை தலைவா்

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் இயக்குநா் ஃபைஸ் ஹமீது காபூல் நகருக்கு விரைந்துள்ளாா்.

அவருடன், பாகிஸ்தான் அதிகாரிகளின் குழு ஒன்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளது. புதிய அரசு அமைப்பது தொடா்பாக தலிபான்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அந்தக் குழு காபூல் விரைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களைப் பற்றி தலிபான்களுடன் அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஆப்கானிஸ்தானின் புதிய அரசில் தங்களது ஆதரவு பெற்ற ஹக்கானி அமைப்புக்கு அதிக அதிகாரம் பெற்றுத் தருவதற்காக காபூலுக்கு ஃபைஸ் ஹமீது விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT