மறைந்த பிரபல ஸ்வீடன் இசைக்கலைஞர் டிம் பெர்க்லிங் அவிசி)-யை நினைவுகூறும் பொருட்டு பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் டிம் பெர்க்லிங். 'அவிசி' என்று அழைக்கப்படுகிறார். 1989ல் ஸ்டாக்ஹோமில் 1989 செப். 8ல் பிறந்த இவர் இளம்வயதிலேயே இசையில் சாதனை படைத்தார். இவருடைய பல பாடல்கள் பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட நாட்டு மக்களிடையே பிரபலம்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2018 ஏப்ரல் 20 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
இன்று (செப்.8) அவருடைய 32 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூறும் பொருட்டு, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.