guat094304 
உலகம்

கௌதமாலா: 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. 

DIN

கௌதமாலா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 3,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,00,840-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,544-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கௌதமாலாவில் 4,41,446 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 46,850 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT