வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் 
உலகம்

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சுற்றிய மர்மங்கள்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணுவ அணிவகுப்பு

வட கொரிய ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உடல் எடையை குறைத்து புதிய பரிமாணத்தில் தோன்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

DIN

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் குறித்து கடந்த பல மாதங்களாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது. இதற்கு முற்றிப்புள்ளிவைக்கும் விதமாக அவர் மக்கள் முன்பு தோன்றியுள்ளார். வட கொரிய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாட்டின் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், உடல் எடை குறைந்த நிலையில், தனது தாத்தாவின் சிகை அலங்காரத்தில் தோன்றினார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ராணுவ அணிவகுப்பில் எந்த ஒரு புதிய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், கடந்த பல மாதங்களாக உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு புதிய தோற்றத்தில் தோன்றிய கிம் ஜோங் உன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பியோங்யாங்கில் கிம் II சுங் சதுக்கத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்த உன், வெளிர் நிற உடையை அணிந்திருந்தார். ஆனால், அவர் உரை நிகழ்த்தவில்லை. இருப்பினும், கைகளை அசைத்தும் சிரித்தும் ராணுவ வீரர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிக உடல் எடையுடன் இருக்கும் அவர் புகைப்பிடிப்பு பழக்கத்தை கொண்டவர் ஆவார். குறிப்பாக, அவரின் குடும்பத்தார் இருதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளனர். எனவே, கடந்த பல ஆண்டுகளாக, அவரின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டது. அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருகிறது. கிட்டத்தட்ட 20 கிலோ எடைகளை அவர் குறைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து மறையும் பணிச்சுமை!

SCROLL FOR NEXT