உலகம்

பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்களுக்கானத் தடை செப். 15 வரை நீட்டிப்பு

DIN


பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்கான தடை செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,689 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 83 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

இஸ்லாமாபாத் மற்றும் இதர 24 மாவட்டங்களில் செப்டம்பர் 15 வரை கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கரோனா பரவல் அதிகம் இருக்கும் 24 மாவட்டங்களில் செப்டம்பர் 12-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT