கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா; கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை

இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கரோனா நிலை தொடர்வதை காண முடிகிறது என கரோனா பெருந்தொற்று நிபுணர் தெரிவித்துள்ளார்.

DIN

அமெரிக்காவில் டெல்டா கரோனாவால் ஏற்பட்டிருக்கும் புதிய கரோனா அலை விரைவாக உச்சம் தொடும் என்றும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல், வரவிருக்கும் ஆண்டுகளில் அனைவரது வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைரஸ் மாறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விகிதமும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக திங்கள்கிழமை வரையிலான ஏழு நாள்களில், சராசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக பதிவாகியுள்ளது. 

இருப்பினும், நாள் ஒன்றுக்கு கரோனா காரணமாக 1,800 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்கள் பரவிவரும் நிலையில், அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு சந்திக்கும் சவால்களையே இது உணர்த்துகிறது. 

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவ துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கரோனா நிலை தொடர்வதை காண முடிகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், டெல்டா கரோனா குறைந்துவரும் நிலையை பார்க்க முடிகிறது.

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கரோனா அலை முடிவடைந்திருப்பது சற்ற நிம்மதியை அளிக்கிறது. ஆனால், இம்முறை கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT