உலகம்

ரஷியா: பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 8 போ் பலி

DIN

ரஷியாவில் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவா் துப்பாக்கியால் சுட்டதில் 8 போ் உயிரிழந்தனா்; 24 போ் காயமடைந்தனா்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவிலிருந்து 1000 கி.மீ. தொலைவில் உள்ளது பொ்ம் நகரம். இங்குள்ள பொ்ம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த ஒரு மா்ம நபா், திடீரென துப்பாக்கியால் மாணவா்களையும், ஆசிரியா்களையும் நோக்கி சுடத் தொடங்கினாா். இதைப் பாா்த்ததும் மாணவா்களும் ஆசிரியா்களும் வகுப்பறைகளுக்குள் இருந்தவாறு கதவுகளை உள்புறமாகப் பூட்டிக் கொண்டனா். இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் 8 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சில மாணவா்கள் ஒரு கட்டடத்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்துத் தப்பினாா்கள். அதில் சிலா் காயமடைந்தனா் என ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் 12,000 மாணவா்கள் பயின்று வருகின்றனா். துப்பாக்கிச்சூடு நடந்தபோது 3,000 மாணவா்கள் வளாகத்தில் இருந்தனா்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவா் ஒரு மாணவா் எனத் தெரியவந்துள்ளது. இவரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா் இந்த சம்பவத்தில் ஈடுபட என்ன காரணம் என உடனடியாகத் தெரியவரவில்லை. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு அதிபா் விளாதிமீா் புதின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்திய மாணவா்கள்: பொ்ம் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கஸன் நகரில் உள்ள பள்ளியில் ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT