இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் வெள்ளிக்கிழமை மாலை தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு பேசிய கோபால் பாக்லே இவ்வாறு கூறினார். இலங்கையில் வாழும் முஸ்லிம் தலைவர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர்.
விருந்தினர்களில், இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, வங்கதேசத்துக்கான இலங்கை தூதர் தாரேக் மொஹம்மது அரிஃபுல் இஸ்லாம் மற்றும் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என ஏராளமானோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வெகு காலமாக உதவிகளை பரிமாறிக் கொள்கிறோம். இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்தியா தொடர்ந்து உதவும் என்று தெரிவித்தார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.