உலகம்

உக்ரைனில் 45.1%, ரஷியாவில் 11.2% பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்: உலக வங்கி கணிப்பு

DIN

போரின் எதிரொலியாக உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவிகிதமும் ரஷியாவின் பொருளாதாரம் 11.2 சதவிகிதமும் வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.  

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் உக்ரைனின் பெரும்பாலான நகர்ப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. ரஷியா தரப்பிலும் ஆயிரக்கணக்கில் வீரர்களை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலயில் இந்த போரினால் இரு  நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையும் என்று உலக வங்கி கூறியுள்ளது. 

உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி கூறியுள்ள நிலையில், கடந்த மாதம் ஐ.எம்.எப். கணித்ததைவிட(35%) இது 10% அதிகமாகும். 

அதுபோல,  ரஷியா 11.2 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'எங்களது கணிப்புகள் மிகவும் நிதானமானவை. பல நாடுகள் இன்னும் கரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவில்லை. அவ்வாறு இருக்கையில் இரு ஆண்டுகளுக்குள்ளாக இந்த போரும் மிக அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. 

2008 உலக பொருளாதார நெருக்கடியைவிட ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பாதிப்பு அதிகம் இருக்கும். இது ரஷியாவில் 20% உக்ரைனில் 75% வீழ்ச்சி ஏற்படும்' என்று ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT