உலகம்

வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக செலுத்த முடியாது: இலங்கை அரசு

DIN


கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடன் தொகை செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் பெரும் கூட்டமாக சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கசில்லறை பணவீக்கம் 6.95% ஆக அதிகரிப்பு

கரோனா தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக நட்புறவு நாடுகளிடம் இலங்கை உதவியை நாடி வருகிறது.

நிலைமையை சீராக்க மக்கள் அமைதி காக்க வேண்டும் என நாட்டு மக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து பெற்ற வெளிநாட்டுக் கடன் 3.87 லட்சம் கோடி கடன் தொகை செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நாட்டு நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நிதியமைச்சகத்தின் இடைக்காலத் திட்டமாக வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT