கோப்புப்படம் 
உலகம்

கராச்சியில் வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை: ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் கைவரிசை

கராச்சியில் 2022 ஆம் ஆண்டின் முதல் வங்கிக் கொள்ளையாக நேற்று வியாழக்கிழமை ரூ. 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

இஸ்லாமாபாத்: கராச்சியில் 2022 ஆம் ஆண்டின் முதல் வங்கிக் கொள்ளையாக நேற்று வியாழக்கிழமை ரூ. 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு வங்கிக்குள் காலை 11:09 மணியளவில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வங்கி காவலர்களையும், வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பணம் வைக்கப்பட்டிருந்த கவுண்டர்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துடன், காவலர்களின் ஆயுதங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

தகவல் அறிந்து வங்கிக்கு வந்த போலீஸார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் அடையாளம் தெரியாக நபர்கள் மீது ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கராச்சி சுந்திரிகர் சாலையில் உள்ள வங்கி ஒன்றுக்கு பணம் எடுத்துவரும் வேன் ஓட்டுநர் பணம் மற்றும் வேனுடன் தப்பி ஒடினார். இது குறித்து ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மீத்தாடர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT