உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 50 கோடியைக் கடந்துள்ளது

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 62.1 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்து வந்த நிலையில், சில நாள்களாக மீண்டு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50,30,27,879 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 62,17,873 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 45,31,63,608 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 4,36,46,398 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 43,068 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,22,52,965 -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,14,902 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 43,039,972     ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,21,772 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,02,34,024 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,61,855    பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT