முகப்பு
உலகம்

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு:33 போ் பலி

 ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் மசூதி மற்றும் மதரஸாவில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் மாணவா்கள் உள்பட 33 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் மசூதி மற்றும் மதரஸாவில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் மாணவா்கள் உள்பட 33 போ் உயிரிழந்தனா்.

இமாம் சாகேப் என்ற நகரத்தில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தலிபான்களின் கலாசார துறை துணை அமைச்சா் ஷபியுல்லா முஜாஹித் தெரிவித்தாா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரின் சேஹ் டோகன் மசூதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில், தொழுகை நடத்திக்கொண்டிருந்த 12 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக ஐ.எஸ். அமைப்பைச் சோ்ந்த அப்துல் ஹமீது சாங்கா்யா் என்பவரை தலிபான்கள் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.