உலகம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை

DIN

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு (76), ஊழல் வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இது குறித்து அதிகரிகள் கூறியதாவது:

தனக்கு நெருக்கமான அரசியல்வாதியிடமிருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான டாலரை ஆங் சான் சூகி கையூட்டாகப் பெற்ாக ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை புதன்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வரும் 11 ஊழல் வழக்குகளில் முதல்முறையாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வேறு வழக்குகளில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT