கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக மாறிய மாணவிகள்: சொல்வது யுனெஸ்கோ 
உலகம்

கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக மாறிய மாணவிகள்: சொல்வது யுனெஸ்கோ

மாணவர்களே கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக இருந்ததாகவும், ஆனால், தற்போது அந்த வேறுபாடு மறைந்துவிட்டதகாவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

ANI


பாரிஸ்: முந்தைய காலக்கட்டத்தில், கணக்குப்பாடத்தில் இருபாலரிடையே மிகப்பெரிய வேறுபாடு இருந்ததாகவும், மாணவர்களே கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக இருந்ததாகவும், ஆனால், தற்போது அந்த வேறுபாடு மறைந்துவிட்டதகாவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

மாணவிகளின் கல்வி கற்கும் திறன் அதிகரித்திருக்கும் ஒரு நல்ல தகவலை யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்கள் தங்களது திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இன்னும் அதிகமாக சிந்தித்து செயலாக்க வேண்டும் என்ற அழைப்பை இந்த ஆய்வறிக்கை விடுப்பதாக உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ இந்த ஆய்வறிக்கையை தயாரிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி, முந்தைய காலத்தில், கணிதப் பாடத்தில் மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த பாலின வேறுபாடு மெல்ல மறைந்துவிட்டது. இந்த பாலின வேறுபாடு ஏழை நாடுகளிலும் கூட மறைந்திருப்பதகாவும், ஒரு சில நாடுகளில் இந்த பாலின வேறுபாடு அப்படியே எதிர்மறையாக அதாவது மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT