உலகம்

கழிப்பறையில் இயங்கிய உணவகத்தின் சமையலறை: சமோசா பிரியர்கள் அதிர்ச்சி

DIN

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த உணவகத்தை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம். உணவகத்தின் சமையலறைக்கு அருகே இருந்த கழிப்பறையில்தான் சமோசா உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

உடனடியாக அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர் அதிகாரிகள். அங்கு நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிட்டு வந்த வாடிக்கையாளர்களுக்கோ இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நல்லவேளை, இந்த உணவகம் இந்தியாவில் இயங்கவில்லை - இதைவிட மோசமாகக் கூட இங்கு இருக்கிறது. அது வேறு - என்று மக்கள் நிம்மதி அடைந்து கொள்ளலாம். காரணம், சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இயங்கி வந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு உணவகம் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வருவதாகவும், அங்கு கழிப்பறையில்தான் பல உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து சோதனை செய்தபோது அது உண்மை என்று தெரிய வந்தது.

அது மட்டுமல்லாமல் அங்கு சமையலுக்குப் பயன்படுத்தி வந்த பொருள்கள் எல்லாமே காலாவதியானவையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT