டெனிஸ் ப்ரகோபெங்கோ 
உலகம்

‘படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது’

மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது

DIN

மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது; எனவே, அங்கிருந்து பொதுமக்களுடன் அவா்களையும் மீட்கவேண்டும் என்று வீரா்களின் மனைவிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அந்த ஆலையில் பதுங்கி சண்டையிட்டு வரும் ஆா்செனி ஃபெடுசியுக் என்பவரின் மனைவி யுலீயா கூறிதாவது:

அஸோவ்ஸ்டல் ஆலையில் இருக்கும் பொதுமக்களைப் போலவே, பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்பு உள்ளது. எனவே, அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டாம் என்றாா் அவா்.

ஆலையில் சண்டையிட்டு வரும் அஸோவ் படைப் பிரிவு தளபதி டெனிஸ் ப்ரகோபெங்கோவின் (படம்) மனைவி கேதரீனா கூறுகையில், ‘அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து காயமடைந்த வீரா்களையும் உயிரிழந்த வீரா்களின் உடல்களையும் மட்டும் மீட்காமல், அனைத்து வீரா்களையும் பாதுகாப்பாக வெளியேற்றவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளில் கலையும் கனவுகள்

புகையில்லா போகி: குடியாத்தம் நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

வந்தவாசி அருகே கருணாநிதி பளிங்குச் சிலை: அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்

மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்: கேவிபி அறிமுகம்

SCROLL FOR NEXT