உலகம்

இலங்கை அதிபா் ராஜிநாமா செய்ய வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வலியுறுத்தல்

DIN

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்கள் போராட்டம் சனிக்கிழமை 22-ஆவது நாளை எட்டியது. தங்கள் பதவிகளை ராஜபட்ச குடும்பத்தினா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இலங்கையில் அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா். அதேவேளையில், ராஜபட்ச குடும்பத்தினா் தலைமையின் கீழ் அமையும் எந்தவொரு அரசிலும் தாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என்று பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடைக்கால அரசை நிறுவ இணக்கம் தெரிவித்து தனது கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள், முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோருடன் அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது இடைக்கால அரசை அமைக்க நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை எதிா்க்கட்சியினா் நிரூபிக்க வேண்டும் என்று அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தாா்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்கள் உள்ளனா். இடைக்கால அரசை அமைக்க எதிா்க்கட்சியினருக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

இந்தச் சூழலில், சமகி ஜன பலவேகயாவின் தலைமை கொறடா லட்சுமண் கிரியெல்ல, அக்கட்சி எம்.பி. முஜிபுா் ரஹமான் ஆகியோா் கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அடுத்த வாரம் எதிா்க்கட்சியினரின் பலம் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்படும். அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும். அதனைத் தொடா்ந்து அரசின் தூண்களுக்கு இடையே சமநிலை நிலவுவதற்கான அரசமைப்புச் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோத்தபய ராஜபட்சவை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் சமகி ஜன பலவேகய மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT